Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடுகளில் இருந்து ரூ. 50,000க்கு அதிகமாக தங்கம் கொண்டு வந்தால் வரி செலுத்தவேண்டும் ...என சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து ரூ. 50,000க்கு அதிகமாக தங்கம் கொண்டு வந்தால் வரி செலுத்தவேண்டும் ...என சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு

By: vaithegi Tue, 14 June 2022 11:46:21 PM

வெளிநாடுகளில் இருந்து ரூ. 50,000க்கு அதிகமாக தங்கம் கொண்டு வந்தால் வரி செலுத்தவேண்டும் ...என சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு

சென்னை : கொரோனா பெரும் தொற்றுநோய்த் தாக்கத்தினால், நாட்டின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் மோசமான நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் ஏறியது. இதை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறினர். இந்த வகையில் ஆபரண தங்க விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை போன்ற பல்வேறு வெளிநாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவதாகவும், அவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

gold,airport,customs officials ,தங்கம் ,விமான நிலையம்,சுங்கத்துறை அதிகாரிகள்

அந்த வகையில் அண்மையில் துபாயிலிருந்து விமானத்தில் திருச்சி வந்த பயணி ஒருவர் Hand Mixer, Hair Styler, Geepas Trimmer box with Charger, Portable Electric Juicer and a Baby Fan ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்த போது இதில் 19.99 லட்சம் மதிப்பிலான 386.500 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. மேலும் தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து ரூ. 50,000க்கு அதிகமாக தங்கம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தால் வரி செலுத்தவேண்டும் என சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
|