Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரூ. 10 கோடி செலவில் 384 கடைகள் கொண்ட நவீன மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவிப்பு

ரூ. 10 கோடி செலவில் 384 கடைகள் கொண்ட நவீன மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவிப்பு

By: vaithegi Thu, 20 Apr 2023 12:22:37 PM

ரூ. 10 கோடி செலவில்  384 கடைகள் கொண்ட நவீன மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவிப்பு



சென்னை : சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாடு அரசு மீனவர்கள் நலனிலும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதிலும் தனிக் கவனம் செலுத்தி உ வருகிறது. சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீனவர்கள் நலனுக்காக போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், பொதுமக்கள் எளிதாக மீன்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் சென்னை மாநகராட்சியால் ரூபாய் 10 கோடி மதிப்பில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த நவீன மீன் மார்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இக்கடைகளில் வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. மீன் கடைகளின் மேற்கூரை சிந்தடிக் சீட்டால் அமைக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு தனிப்பட்ட கடைக்கும் தண்ணீர் வசதியும், கழுவும் வசதியும் மின் வசதியும் செய்யப்படுகிறது. மேலும் கழிவுநீர் அகற்றும் வசதியும், கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப்பணியானது ஆறு மாதத்தில் முடிவடையும்.

fish market,shops,corporation ,மீன் மார்க்கெட்,கடைகள் ,மாநகராட்சி

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்திட சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி காவல்துறையுடன் இணைந்து நொச்சிக்குப்பம் லூப் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனவே மீனவர்களின் நலனுக்காக தற்போது மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலையில் கிழக்கு பக்கம் வியாபாரம் செய்ய நீதிமன்றம் தெரிவித்தபடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீனவர்களின் நலன் கருதி நொச்சிக்குப்பம் லூப் சாலையின் மேற்குப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி உள்ள இடத்தில் மீனவர்கள் மீன் விற்பனை செய்ய எளிதாக இருக்கும் வகையிலும் மீனவர்கள் வாழ்வாதரத்தினை காத்திடும் வகையிலும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சென்னை மாநகராட்சி சார்பில், உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் 19-ம் தேதி ஒத்திவைத்துள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசின் இந்த அறிவிப்பை ஏற்று நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

Tags :
|