Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கம் நிலைபெற ரூ.55 லட்சம் கோடி ஒதுக்கீடு

அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கம் நிலைபெற ரூ.55 லட்சம் கோடி ஒதுக்கீடு

By: Monisha Sat, 13 June 2020 5:14:45 PM

அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கம் நிலைபெற ரூ.55 லட்சம் கோடி ஒதுக்கீடு

அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக தற்போது நவீனமயப்படுத்துவதற்காக ராணுவத்திற்கு ரூ.55 லட்சம் கோடி ஒதுக்குவதற்கான மசோதா நிறைவேறியது. இதற்காக வரும் 2020-21 நிதியாண்டில் ராணுவ பட்ஜெட்டிற்கு ரூ.55 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சீனா, ரஷ்யாவுக்கு எதிரான ராணுவப் பலத்தை மேம்படுத்த இந்த பட்ஜெட் தொகை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் ஹைப்பர்சானிக் ஆயுதங்கள், பயோ-டெக்னாலஜி, சைபர் பாதுகாப்பு ஆகிவற்றை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிலம், கடல், வான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கம் நிலைபெறச் செய்ய முடியும் என்று அமெரிக்கா கருதுகிறது.

us army,rs.55 trillion,hypersonic weapons,bio-technology,cyber ​​security ,அமெரிக்க ராணுவம்,ரூ.55 லட்சம் கோடி,ஹைப்பர்சானிக் ஆயுதங்கள்,பயோ-டெக்னாலஜி,சைபர் பாதுகாப்பு

அடுத்த தலைமுறை தளவாடங்கள், நவீன அணு ஆயுதங்கள் மூலம் ராணுவத்தை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏவுகணை தடுப்பு சாதனங்களை ஒருங்கிணைப்பதற்கும் இந்த மசோதாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது, பலியானோர் எண்ணிக்கை 1,16,831 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் இடமில்லை, வென்ட்டிலேட்டர்கள் போதிய அளவில் இல்லை, போன்ற பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும் போது இப்படிப்பட்ட மசோதாவா என்று அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags :