Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன அதிபர் வீட்டுக்காவலில் இருப்பதாக பரவும் செய்திகள்?

சீன அதிபர் வீட்டுக்காவலில் இருப்பதாக பரவும் செய்திகள்?

By: Nagaraj Sat, 24 Sept 2022 9:54:45 PM

சீன அதிபர் வீட்டுக்காவலில் இருப்பதாக பரவும் செய்திகள்?

சீனா: சீன அதிபருக்கு வீட்டு காவலா?... உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிழக்கு ஆசிய நாடான சீனாவின் அதிபராக நீண்ட காலமாக பதவி வகித்துவருபவரும் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவருமான ஜீ ஜின்பிங், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன ஊடகங்கள் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவில்லை. சீன மக்கள் விடுதலை ராணுவம், ஜின்பிங்கை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியானது. சீனாவில் பாதுகாப்பு உயரதிகாரி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, அதிபர் ஸீ ஜின்பிங்கை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.

china,home guard,president,airplanes,not working,rumors ,சீனா, வீட்டுக்காவல், அதிபர், விமானங்கள், இயங்கவில்லை, வதந்திகள்

சீன மனித உரிமை ஆர்வலரும் தற்போது அமெரிக்காவில் இருப்பவருமான ஜெனிஃபர் ஜெங், வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், 'செப்டம்பர் 22ம் தேதி சீன மக்கள் ராணுவத்தின் வாகனங்கள் பெய்ஜிங் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஹவுன்லாய் கவுன்டியில் இருந்து ஹெபெய் மாகாணம் உல்ள ஜன்க்ஜியாகெள நகர் வரை சுமார் 80 கிலோ மீட்டர் வாகனங்கள் அணிவகுந்துச் சென்றன.

இதனிடையே, சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஜின்பிங்கை நீக்கிவிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன' என்று ஜெனிஃபர் ஜெங் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீனாவில் 60 சதவீத விமானங்கள் வெள்ளிக்கிழமை இயக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|