Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறேன்... போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறேன்... போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

By: Nagaraj Sat, 22 Oct 2022 9:21:52 PM

பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறேன்... போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

பிரிட்டன்: நானும் போட்டி... பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரான அவர் கொவிட் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகப் முறைப்பாடு வந்ததையடுத்து, பதவி விலகியிருந்தார். இதனையடுத்து, அவருடைய பொறுப்புக்கு லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

prime ministership,competition,announcement,boris johnson,rishi sunak ,பிரதமர் பதவி, போட்டி, அறிவிப்பு, போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக்

எனினும் அவர், கன்சர்வேட்டிவ் தலைமைத்துவத்திலிருந்து விலகுவது குறித்து மன்னர் மூன்றாவது சார்லஸூக்கு அறிவித்துள்ளதாக கூறினார். இந்நிலையிலேயே, பிரித்தானிய பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அதேநேரம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும் பிரதமர் பதவிக்கான முன்வரிசைப் போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :