Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனில் இருந்து 19 ஆயிரம் குழந்தைகளை ரஷ்யா கடத்தியதாக குற்றச்சாட்டு

உக்ரைனில் இருந்து 19 ஆயிரம் குழந்தைகளை ரஷ்யா கடத்தியதாக குற்றச்சாட்டு

By: Nagaraj Thu, 21 Sept 2023 2:14:48 PM

உக்ரைனில் இருந்து 19 ஆயிரம் குழந்தைகளை ரஷ்யா கடத்தியதாக குற்றச்சாட்டு

உக்ரைன்: குழந்தைகள் கடத்தல் என குற்றச்சாட்டு... உக்ரைனிலிருந்து 19 ஆயிரம் குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்திச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு வர உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

child trafficking,ukraine,brainwashing,accusation ,குழந்தைகள் கடத்தல், உக்ரைன், மூளைச்சலவை, குற்றச்சாட்டு

நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய ஒலெனா ஜெலன்ஸ்கா, உக்ரைனிலிருந்து கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளிடம், பெற்றோரும், உக்ரைன் அரசும் அவர்களை தலை மூழ்கிவிட்டதாக கூறி தாய் நாட்டிற்கு எதிராக அவர்களை ரஷ்ய அதிகாரிகள் மூளை சலவை செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இத்தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags :