Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போர் நிறுத்தம் மீறப்பட்டதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

போர் நிறுத்தம் மீறப்பட்டதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

By: Nagaraj Sat, 07 Jan 2023 1:49:20 PM

போர் நிறுத்தம் மீறப்பட்டதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்யா: உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு... ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் மீறப்பட்டதாக கூறப்படுகின்றது.

உக்ரைனிய தரப்பில் ஒரு மீட்புப் பணியாளர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அதேநேரத்தில் டொனெட்ஸ்க் நகரம் பாதிக்கப்பட்டதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸுடன் இணைந்து 36 மணி நேர ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டது. ஆனால், துருப்புக்களை வலுப்படுத்த ரஷ்யா திட்டமிடுவதாக கூறி இதை உக்ரைன் நிராகரித்தது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாஸ்கோ நேரப்படி 12:00 மணிக்கு தொடங்கி, முழு போர் நிறுத்தத்தை கடைபிடிப்பதாக வலியுறுத்தியது.

kherson,city,terrorist attack,russian president,vladimir,accusation ,கெர்சன், நகரம், பயங்கரவாதத் தாக்குதல், ரஷ்ய ஜனாதிபதி, விளாடிமிர், குற்றச்சாட்டு

போர்நிறுத்தத்தின் போது உக்ரைனிய இராணுவம், ரஷ்ய நிலைகளைத் தாக்கியபோது மட்டுமே அதன் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அது கூறியது. போர்நிறுத்தம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உக்ரைன் முழுவதும் வான்வழி எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டன.


பின்னர் கெர்சன் பிராந்தியத்தின் ஆளுனர், தீயணைப்பு நிலையத்தின் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டதாகவுமு; அதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் கூறினார். கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்க் தாக்குதலுக்கு உள்ளானது மற்றும் ஒரு டசன் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்

லுஹான்ஸ்க் பிராந்தியத் தலைவர், ரஷ்யாவின் கிறிஸ்மஸ் போர்நிறுத்தம் ஒரு பொய் மற்றும் ஒரு பொறி’ என்று எச்சரித்தார், ரஷ்யர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிடலாம் என்பதால், ஆர்த்தடாக்ஸ் சர்ச் சேவைகளில் கலந்து கொள்ளவோ அல்லது நெரிசலான இடங்களில் கூடவோ வேண்டாம் என்று குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags :
|