Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆக்கிரமிப்பு பகுதிகளில் மருந்துகள் வழங்கும் முயற்சியை தடுத்த ரஷ்யா

ஆக்கிரமிப்பு பகுதிகளில் மருந்துகள் வழங்கும் முயற்சியை தடுத்த ரஷ்யா

By: Nagaraj Sun, 14 Aug 2022 4:46:58 PM

ஆக்கிரமிப்பு பகுதிகளில் மருந்துகள் வழங்கும் முயற்சியை தடுத்த ரஷ்யா

உக்ரைன்: உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மருந்து விநியோகத்தை ரஷ்யா தடுத்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் முயற்சியை தடுத்ததன் மூலம் ரஷ்ய அதிகாரிகள் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தை செய்ததாக தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இந்த பகுதிகளில் மருந்துகள் வழங்கும் முயற்சியை தடுப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

health centers,russia,attack,world health organization,hospital ,சுகாதார மையங்கள், ரஷ்யா, தாக்குதல், உலக சுகாதார அமைப்பு, மருத்துவமனை

மேலும் உணவு பொருட்கள் வழங்குவதற்கும் ரஷ்யா தடுக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தாக்குதலில் உயிரிழப்பவர்களை விட உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், இதனை போர்க்குற்றம் என்றும் லியாஷ்கோ விமர்சித்தார்.

ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார மையங்கள் மீது 445 முறை ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்துதான் உக்ரைனில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மருந்து விநியோகத்தை ரஷ்யா தடுத்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஷ்கோ குற்றம்சாட்டியுள்ளார்.

Tags :
|
|