Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் போரில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கிறதாம் ரஷ்யா

உக்ரைன் போரில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கிறதாம் ரஷ்யா

By: Nagaraj Sat, 10 Dec 2022 3:10:55 PM

உக்ரைன் போரில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கிறதாம் ரஷ்யா

ரஷ்யா: தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் ரஷ்யா... உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போரில் தற்போது வரை 93,000-த்திற்கும் மேற்பட்ட ரஷ்யப்படையினர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்ய மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் உட்பட முக்கியமான பகுதிகளை சமீப நாட்களாக ரஷ்யப்படையினர் இழந்து வருகிறார்கள். இதனால், ரஷ்யா பெரும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது.

93000 soldiers,casualties,ukraine,world news,war,russia ,93000 வீரர்கள், உயிரிழப்பு, உக்ரைன், உலக செய்திகள், போர், ரஷ்யா

எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தொடர்வோம் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் ரஷ்யா தாக்குதலை தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 93,000 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் நாட்டின் ஆயுதப்படைகளின் ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதில் நேற்று ஒரே நாளில் ரஷ்ய வீரர்கள் 340 பேரை உக்ரைன் படையினர் கொன்றதாக முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவல் ரஷ்ய மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|