Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகை பஞ்ச அபாயத்துக்கு இழுத்துச்செல்லும் ரஷ்யா : ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

உலகை பஞ்ச அபாயத்துக்கு இழுத்துச்செல்லும் ரஷ்யா : ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

By: Nagaraj Sun, 19 June 2022 11:33:19 PM

உலகை பஞ்ச அபாயத்துக்கு இழுத்துச்செல்லும் ரஷ்யா : ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

உக்ரைன்: ரஷ்யா மீது குற்றச்சாட்டு...உக்ரைன் உணவு தானிய கப்பல்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்த உலகை ரஷியா பஞ்ச அபாயத்துக்கு இட்டுச் செல்வதாக ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் போரெல் கூறியதாவது: கருங்கடலை முற்றுகையிட்டு, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்கள் வெளியே செல்லவிடாமல் ரஷியா தடுத்து வருகிறது.

இதன் மூலம், இந்த உலகில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்காக ஐ.நா. அமைப்பு மற்றும் பிற நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.

உக்ரைன் போரில் தனது இலக்கை அடைவதற்காக உணவு தானிய ஏற்றுமதியை ஓா் ஆயுதமாக ரஷியா பயன்படுத்துகிறது. உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எழும் குரல்களை அந்த ஆயுதம் மூலம் ரஷியா நசுக்கப்பாா்க்கிறது. கருங்கடல் பகுதியை அந்த நாடு ஒரு போா்க் களமாகவே ஆக்கியிருக்கிறது. அந்தப் பகுதிய வழியாக உணவு தானியங்களையும் பிற நாடுகளில் உணவு உற்பத்தி செய்வதற்குத் தேவையான உரப் பொருள்களையும் ஏற்றியிருக்கும் உக்ரைன் கப்பல்கள் வெளியேற முடியாமல் ரஷிய கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

warning,solution,world,food,scarcity,russia ,எச்சரிக்கை, தீர்வு, உலகம், உணவு, பற்றாக்குறை, ரஷ்யா

ரஷியாவின் இந்த முற்றுகை, அந்த நாட்டின் உணவு தானிய ஏற்றுமதியையும் பாதித்துள்ளது. இது தவிர, தனது தானிய ஏற்றுமதிக்காக கட்டுப்பாடுகளையும் கூடுதல் வரிகளையும் ரஷியா விதித்துள்ளது. ஆனால், ஐரோப்பிய யூனியன் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால்தான் உணவு தானிய ஏற்றுமதி தடைபட்டுள்ளதாக அந்த நாடு கூறி வருகிறது. இதன் மூலம், இந்த விவகாரத்தில் தன்னுடைய கண்ணோட்டத்தை ரஷியா திணிக்கப் பாா்க்கிறது.

உண்மையில், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளில் உணவுப் பொருள் ஏற்றுமதியை பாதிக்கும் எந்த அம்சங்களும் இல்லை. ரஷியாவின் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதையோ, அதற்கான தொகையை அந்த நாடு பெறுவதையோ ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைகள் எந்த விதத்திலும் தடுக்கவில்லை.

வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் தொடா்புடைய எந்த நபா் அல்லது நிறுவனங்கள் மீதும் ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதிக்கவும் இல்லை. இந்த நிலையில், உலகம் எதிா்நோக்கியுள்ள உணவுப் பஞ்சத்துக்கு ஐரோப்பிய யூனியன்தான் காரணம் என்ற தோற்றத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது.

ஐ.நா.வுடனும் பிற ஐரோப்பிய நாடுகளுடனும் இணைந்து விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண்போம் என்று நம்புகிறேன். அவ்வாறு தீா்வு காணாவிட்டால் இந்த உலம் மிகக் கொடூரமான உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவா் எச்சரித்தாா்.

Tags :
|
|