Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடுப்பூசியை உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பை எதிர்பார்க்கும் ரஷ்யா!

தடுப்பூசியை உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பை எதிர்பார்க்கும் ரஷ்யா!

By: Monisha Fri, 21 Aug 2020 10:01:10 AM

தடுப்பூசியை உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பை எதிர்பார்க்கும் ரஷ்யா!

ரஷ்யாவின் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர் சிட்டி மற்றும் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் இணைந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மருந்து தனது மகளுக்கு செலுத்தப்பட்டதாக ரஷியா அதிபர் புதின் தெரிவித்தார். அவர்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்திற்கு ஸ்பூட்னிக் - வி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனை தற்போது நடந்து வருகிறது.

இந்தநிலையில் பெரிய அளவில் உற்பத்தியில் மருந்து தயாரிப்பிற்காக இந்தியாவின் பங்களிப்பை ரஷ்யா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் - வி தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா முன்வருவதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் ட்மிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

corona virus,vaccine,india,russia,contribution ,கொரோனா வைரஸ்,தடுப்பூசி,இந்தியா,ரஷ்யா,பங்களிப்பு

இது குறித்து கிரில் ட்மிட்ரிவ் கூறுகையில், "லத்தீன், அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது தடுப்பூசி உற்பத்தி தான் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது.

நாங்கள் இந்தியாவின் பங்களிப்பை எதிர்பாக்கிறோம். தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இது போன்ற நோய் தடுப்பு மருந்தினை பெருமளவு தயாரிப்பதில் இந்தியா நல்ல திறன் கொண்ட நாடாகும். இதில் சர்வதேச ஒத்துழைப்பை ரஷ்யா எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து, இந்தியாவுடன் நட்புறவில் இருக்கும் ரஷியாவிடம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|