Advertisement

உக்ரைன் எல்லையில் 5 லட்சம் வீரர்கள் குவித்துள்ள ரஷ்யா

By: Nagaraj Sat, 04 Feb 2023 11:29:57 AM

உக்ரைன் எல்லையில் 5 லட்சம் வீரர்கள் குவித்துள்ள ரஷ்யா

உக்ரைன்: எல்லையில் 5 லட்சம் வீரர்கள் குவிப்பு... படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எல்லையில் ரஷ்யா கிட்டத்தட்ட 5,00,000 வீரர்களை குவித்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில், இன்னும் சில நாட்களில் இந்த போர் தாக்குதல் ஓராண்டு நிறைவை எட்டவுள்ளது.

இந்நிலையில் போரின் ஓராண்டு நிறைவை குறிக்கும் வகையில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக மேற்கத்திய நாடுகள் மற்றும் உக்ரைன் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

போர் தொடங்கிய இது நாள் வரை, சுமார் 1 லட்சத்திற்கும் மேலாக ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது இந்நிலையில் சமீபத்தில் வெளியான செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் எல்லைகளில் ரஷ்யா படைகளை மிகப்பெரிய அளவில் குவித்து வருவது அம்பலமாகியுள்ளது.

one year,ukraine,russia,5 lakhs,accumulation of players ,ஓராண்டு, உக்ரைன், ரஷ்யா, 5 லட்சம், வீரர்கள் குவிப்பு

விமானங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்ஸ் சென்றுள்ள உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் ஓலெக்ஸி ரெஸ்னிகோவ், எல்லைகளில் கடந்த செப்டம்பரில் சுமார் 300,000 இருந்த துருப்புகளின் எண்ணிக்கை தற்போது 5,00,000 ஆக உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் "நாங்கள் எங்கள் எதிரியை குறைத்து மதிப்பிடவில்லை," எல்லைகளில் 300,000 துருப்புகள் குவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் எல்லைகளில் துருப்புக்களை பார்க்கும்போது, எங்கள் மதிப்பீடுகளின்படி இது மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவின் தாக்குதல் இரண்டு பகுதிகளில் குவிந்து இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அவை சமீபத்திய வாரங்களில் கடுமையான சண்டையை கண்ட உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ஆகும்.

உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் ஓலெக்ஸி ரெஸ்னிகோவ் இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது F -16 போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தினார்.

Tags :
|