Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யா போதிய அளவில் பரிசோதிக்கவில்லை; ஜெர்மன் அமைச்சர் குற்றச்சாட்டு

ரஷ்யா போதிய அளவில் பரிசோதிக்கவில்லை; ஜெர்மன் அமைச்சர் குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 12 Aug 2020 5:18:00 PM

ரஷ்யா போதிய அளவில் பரிசோதிக்கவில்லை; ஜெர்மன் அமைச்சர் குற்றச்சாட்டு

போதிய அளவில் பரிசோதிக்கவில்லை... ரஷ்யாவின் கொரோனாவுக்கான 'Sputnik V' தடுப்பூசி போதிய அளவில் பரிசோதிக்கப்படவில்லை என ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. அக்டோபர் முதல் இந்த தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும், தன் மகளுக்கு இதனை செலுத்தி பரிசோதனை செய்ததாகவும் ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் அளித்திருந்தார். இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்த இரண்டு மாதங்களில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

russia,approved,corona,vaccine,german ,ரஷ்யா, ஒப்புதல், கொரோனா, தடுப்பூசி, ஜெர்மன்

இறுதி பரிசோதனைகள் முடிவடைவதற்கு முன்பே, தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுநர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி போதிய அளவு பரிசோதிக்கப்படவில்லை என ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கான தடுப்பூசியை முதலில் கண்டுபிடிப்பதை விட, அது பாதுகாப்பானதாக இருப்பதே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், 'தடுப்பூசியை முறையாக பரிசோதிக்காமல், அதனை லட்சக்கணக்கான மக்களுக்கு செலுத்தினால், இது பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பது சந்தேகமாக உள்ளது. நல்ல தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நான் நிச்சயம் மகிழ்ச்சியடைவேன்.

தொற்றுநோயால் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில், முறையான
சோதனைகள் மேற்கொண்டு, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான விளக்கங்களை கொடுக்க வேண்டியது அவசியம்' என்றார். ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ள கொரோனா தடுப்பூசி 10 சதவீத மருத்துவ பரிசோதனைகளை மட்டுமே நிறைவு செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|