Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கட்டி வருகிறதாம் ரஷ்யா

ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கட்டி வருகிறதாம் ரஷ்யா

By: Nagaraj Sun, 11 June 2023 9:54:31 PM

ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கட்டி வருகிறதாம் ரஷ்யா

வாஷிங்டன்: உதவியுடன் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை ரஷ்யா கட்டி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனின் சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்து வருகிறது.

இப்போது இரு தரப்பிலும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் இரு நாட்டு எல்லையில் உள்ள ரஷ்ய பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. எதிர்காலத்தில், ட்ரோன்கள் தாக்குதல்களுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும்.

aid,drone,factory,iran,russia,usa, ,அமெரிக்கா, ஈரான், உதவி, டிரோன், தொழிற்சாலை, ரஷ்யா

இந்நிலையில் ஈரான் உதவியுடன் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை ரஷ்யா கட்டி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஈரான் கருவிகளை வழங்கி வருவதாக அமெரிக்கா கூறியுள்ள நிலையில், உளவுத்துறை மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.

உக்ரைன் போருக்கான ஆளில்லா விமானங்களை தயாரிப்பதில் ஈரான்-ரஷ்யா ஈடுபடலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடந்த டிசம்பரில் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், உக்ரைன் மீதான போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கியதாகவும், தற்போது ஆளில்லா விமானங்கள் வழங்கப்படவில்லை எனவும் ஈரான் தெளிவாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|
|