Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவிடம் இருந்து தேயிலையை அதிகம் இறக்குமதி செய்யும் ரஷ்யா

இந்தியாவிடம் இருந்து தேயிலையை அதிகம் இறக்குமதி செய்யும் ரஷ்யா

By: Nagaraj Fri, 29 July 2022 11:33:24 PM

இந்தியாவிடம் இருந்து தேயிலையை அதிகம் இறக்குமதி செய்யும் ரஷ்யா

புதுடில்லி: தேயிலையை அதிகம் இறக்குமதி செய்கிறது... தேயிலை ஏற்றுமதியில் முன்னணி நாடாக விளங்கும் இந்தியா ஆண்டுக்கு மொத்தம் 23 கோடி கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்கிறது.
அதில் 16 சதவீதம் ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், ஈரான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரஷ்யா 3 கோடியே 20 லட்சம் கிலோ தேயிலையை இறக்குமதி செய்திருந்தது. மேலும் கடந்த ஆண்டு 25 லட்சம் கிலோவாக இருந்த தேயிலை இறக்குமதி கடந்த ஏப்ரலில் 30 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.

imports,russia,india,tea,value ,இறக்குமதி, ரஷ்யா, இந்தியா, தேயிலை, மதிப்பு

ரஷ்யாவில் தேயிலையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டில் ஒரு கிலோ 187 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேயிலை, இந்த ஆண்டு கிலோ 144 ரூபாயாக குறைந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையால் தேயிலை வாங்குபவர்கள் அமெரிக்க டாலரை விட ரூபாய் அல்லது ரஷ்யாவின் ரூபிள் மூலம் வர்த்தகம் செய்ய வலியுறுத்துவதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதன் பலன் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|
|