Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டம்

இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டம்

By: Nagaraj Wed, 19 Aug 2020 3:29:44 PM

இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டம்

இந்தியாவிலும் உற்பத்தி செய்ய திட்டம்... கோவிட் 19 க்கான முதல் தடுப்பூசியைத் தயாரிப்பதில் ரஷ்யா முழுவீச்சில் தீவிரம் கொண்டுள்ளது. ஸ்புட்னிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை இந்தியாவிலும் உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ரஷ்யா மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இந்தியாவிலும் இதன் உற்பத்தியைத் தொடங்கலாம் என்று ஆலோசனை அளித்து வருகின்றனர். மருந்து தயாரிப்புக்கு நிதி வழங்கும் நிறுவன தலைமை செயல் அதிகாரியான டிமிட்ரேவ் இந்தியாவிலும் மருந்து உற்பத்தியைத் தொடங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

experiment,russia,reviews,govt vaccine,india ,
பரிசோதனை, ரஷ்யா, விமர்சனங்கள், கோவிட் தடுப்பு மருந்து,  இந்தியா

இந்திய விஞ்ஞானிகளும் மருந்து தயாரிப்பாளர்களும் தங்களது தொழில்நுட்பத்தைப் புரிந்துக் கொண்டு மிகச்சிறந்த ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் டிமிட்ரேவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமது பேச்சில் இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் இருப்பதால் இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான சாத்தியங்கள் அதிக அளவில் இருப்பதாகவும் ரஷ்யா மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

கொரோனாவுக்கான மருந்து தயாரிக்கும் போட்டியில் பாதுகாப்பு பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாக வந்த விமர்சனங்களையும் புறந்தள்ளிய டிமிட்ரேவ், ரஷ்யா தயாரிக்கும் தடுப்பு மருந்து பாதுகாப்பானதுதான் என்று உறுதியளித்துள்ளார். தமது 90 வயது பெற்றோர் உள்பட தமது குடும்பம் மொத்தமும் இந்த மருந்தை பரிசோதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags :
|