Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடுப்பூசி குறித்த தகவல்களை இந்தியாவிடம் வழங்கிய ரஷ்யா

தடுப்பூசி குறித்த தகவல்களை இந்தியாவிடம் வழங்கிய ரஷ்யா

By: Nagaraj Tue, 08 Sept 2020 1:08:53 PM

தடுப்பூசி குறித்த தகவல்களை இந்தியாவிடம் வழங்கிய ரஷ்யா

தடுப்பூசி குறித்த தகவல்கள் வழங்கல்... ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்து ஸ்புட்னிக்-5 குறித்த தகவல்களை அந்நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே முதலாவதாக ரஷ்யா கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தினை பதிவு செய்துள்ளது. ஸ்புட்னிக்-5 என்ற பெயர் கொண்ட அந்த மருந்தின் மூன்று கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் அம்மருந்தினை தயாரிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் அம்மருந்தினை தயாரிக்க ரஷ்யா விருப்பம் தெரிவித்த நிலையில் மருந்து குறித்த விவரங்களை அந்நாட்டின் கமாலேயா ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்தியா கேட்டிருந்தது. தற்போது மருந்து குறித்த விவரங்கள் இந்தியாவுக்கு ரஷ்யாவிடமிருந்து அனுப்பப்பட்ட நிலையில் இந்திய வல்லுநர்கள் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

vaccine,drug,details,russia,india,company ,தடுப்பூசி, மருந்து, விபரம், ரஷ்யா, இந்தியா, நிறுவனம்

ரஷ்யா அனுப்பிய விவரங்களின் அடிப்படையில் ஸ்புட்னிக் -5 மருந்து முதல் மற்றும் இரண்டு கட்டங்களில் நல்ல பலனை கொடுத்துள்ளது. மூன்றாவது பரிசோதனையை சவுதி அரேபியா, பிரேசில், யு.ஏ.இ., உள்ளிட்ட நாடுகளில் ரஷ்ய நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ரஷ்ய சென்றிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய தடுப்பு மருந்து குறித்தும் அதன் ஆராய்ச்சிகள் குறித்தும் தனது ரஷ்யாவுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிலையில் லான்செட் மருத்துவ இதழ், மனித உடலில் ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து ஆன்டி பாடிகளை உருவாக்குவதாக அறிவித்திருந்தது. சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 76 பேரிடம் இத்தகவல்கள் பெறப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

Tags :
|
|
|