Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெலாரஸ் நாட்டில் அரசுக்கு ஆதரவாக ராணுவ உதவி செய்ய ரஷியா தயார் - ரஷ்யா அதிபர் புதின் அறிவிப்பு

பெலாரஸ் நாட்டில் அரசுக்கு ஆதரவாக ராணுவ உதவி செய்ய ரஷியா தயார் - ரஷ்யா அதிபர் புதின் அறிவிப்பு

By: Karunakaran Mon, 31 Aug 2020 4:36:27 PM

பெலாரஸ் நாட்டில் அரசுக்கு ஆதரவாக ராணுவ உதவி செய்ய ரஷியா தயார் - ரஷ்யா அதிபர் புதின் அறிவிப்பு

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டபின், அங்கு 1994 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 26 ஆண்டுகள் அலேக்சாண்டர் லூகாஷென்கோ அதிபராக உள்ளார். கடந்த 9 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என்றும் அதிபர் பதவியில் இருந்து அலெக்சாண்டர் விலகவேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் எதிர்கட்சி தலைவர் ஸ்வியாட்லானா பெலாரசின் அண்டை நாடான லிதுவேனியாவுக்கு சென்றுவிட்டார்.

russia,military assistance,belarus,president putin ,ரஷ்யா, இராணுவ உதவி, பெலாரஸ், ஜனாதிபதி புடின்

லிதுவேனியாவில் இருந்தவாரே ஸ்வியாட்லானா போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். மேலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து தங்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் எனவும் ஊக்கமளித்து வருகிறார். அலெக்சாண்டர் அதிபர் பதவியில் இருந்து விலக முடியாது என தெரிவித்து விட்டார். மேலும், இந்த போராட்டங்கள் பிற ஐரோப்பிய நாடுகளின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெற்று வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால், பிற ஐரோப்பிய நாடுகளுடனான தனது நாட்டு எல்லைப்பகுதிகளில் கூடுதல் ராணுவ வீரர்களை பெலாரஸ் அரசு குவித்துள்ளது. நேட்டோ படைகள் தனது நாடு மீது படையெடுக்கலாம் என்பதால் அதிபர் அலெக்சாண்டர் தனது நட்பு நாடான ரஷியாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில், பெலாரஸ் அரசுக்கு தேவைப்படும் பட்சத்தில் ராணுவ உதவிகளையும் செய்ய தயார் என்று புதின் அறிவித்துள்ளார். ரஷிய அதிபரின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|