Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அர்ஜென்டினாவுக்கு 3 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்த ரஷியா

அர்ஜென்டினாவுக்கு 3 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்த ரஷியா

By: Karunakaran Thu, 24 Dec 2020 9:14:22 PM

அர்ஜென்டினாவுக்கு 3 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்த ரஷியா

கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தன. அந்த சமயத்தில் ரஷ்யா முதன் முதலாக கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து வெளியிட்டு பதிவு செய்தது.

அதன்பின், பல்வேறு நிறுவன கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போதைய நிலையில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி, ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

russia,3 lakh doses,sputnik v vaccine,argentina ,ரஷ்யா, 3 லட்சம் டோஸ், ஸ்பூட்னிக் வி தடுப்பூசி, அர்ஜென்டினா

இதில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இங்கிலாந்து, பஹ்ரைன், கனடா நாடுகள் கொள்முதல் செய்துள்ளன. இந்நிலையில் ரஷியாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி மருந்தை லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினா கொள்முதல் செய்துள்ளது. ஒரே நேரத்தில் 3 லட்சம் டோஸ்களை கொள்முதல் செய்துள்ளது.

ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்யப்பட்டதில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பு மருந்தை கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் இணைந்து உருவாக்கியுள்ளது. அர்ஜென்டினாவில் 1.56 மில்லியம் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர்.

Tags :
|