Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போருக்கு பயந்து ஓடும் வீரர்களை சுட்டுக் கொல்லும் ரஷ்யா?

போருக்கு பயந்து ஓடும் வீரர்களை சுட்டுக் கொல்லும் ரஷ்யா?

By: Nagaraj Sun, 06 Nov 2022 11:20:39 AM

போருக்கு பயந்து ஓடும் வீரர்களை சுட்டுக் கொல்லும் ரஷ்யா?

பிரிட்டன்: பயந்து ஓடினால் உயிர் போய்விடும்... போருக்கு பயந்து ராணுவத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்க ரஷ்ய ராணுவம் தனது சொந்த வீரர்களை சுட்டுக் கொல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்புப் படைகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம் எனவும் ரஷ்யா தொடர்பில் பிரித்தானியா சந்தேகம் எழுப்பியுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் இதுபோன்ற செயல்கள் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

உக்ரைன் போர் தொடக்க நாட்களில், தப்பியோடியவர்களைக் கொல்லவும், போருக்கு அனுப்பப்படும் மனச்சோர்வடைந்த துருப்புக்களைப் பயமுறுத்தவும் செச்சென் வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

special forces,surveillance,russian soldiers,shootout,shock ,சிறப்பு படை, கண்காணிப்பு, ரஷ்ய வீரர்கள், சுட்டுக் கொலை, அதிர்ச்சி

தற்போது சுமார் 9 மாதங்களான நிலையில், மீண்டும் 300,000 வீரர்களை உக்ரைனில் களமிறக்க ரஷ்யா ஆயத்தமாகி வருகிறது. இதனால், ஆண்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு உக்ரைனுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,

இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், விளாடிமிர் புடின் அரிதாக மன்னிப்பு கேட்கும் நிலையும் ஏற்பட்டது. மட்டுமின்றி ரஷ்யாவிலிருந்து போராடும் வயதுடைய ஆண்கள் பெருந்திரளாக வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. மேலும், போருக்கு தயாராகாத வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பி வைத்து ரஷ்யா பெரும் இழப்பை தேடிக்கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது களமிறக்கப்படும் வீரர்கள் தப்பி ஓடாமல் இருக்கவே, சிறப்பு படை ஒன்றை நிறுவி, அவர்களின் கண்காணிப்பில் ஒப்படைத்துள்ளனர்.

Tags :