Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்து வெற்றி கண்ட ரஷியா

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்து வெற்றி கண்ட ரஷியா

By: Karunakaran Mon, 13 July 2020 2:50:19 PM

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்து வெற்றி கண்ட ரஷியா

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியிருந்தாலும், இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

தற்போது, கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, அதனை மனிதர்கள் மீது செலுத்தி ரஷியா வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.

russia,coronavirus,corona vaccine,corona test ,ரஷ்யா, கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பூசி, கொரோனா சோதனை

இதுகுறித்து டிரான்ஸ்லேஷனல் மெடிசன் மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வடிம் டரசோவ் கூறுகையில், செச்சேனோவ் ஃபர்ஸ் மாஸ்கோ ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் மீது உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பு மருந்துகளைப் போன்று பாதுகாப்பான அம்சங்களை புதிய தடுப்பு மருந்தும் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த தடுப்பு மருந்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் செச்சேனோவ் பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் பாராசிடோலஜி, ட்ரோபிகல் மற்றும் வெக்டார்-போர்ன் டிசீசஸ் பிரிவின் இயக்குநர் அலெக்சாண்டர் லுகாஷேவ் கூறியுள்ளார்.

Tags :
|