Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல்

உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல்

By: Nagaraj Thu, 04 May 2023 8:12:41 PM

உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல்

உக்ரைன்: உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.

கிரெம்ளின் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சித்ததாக உக்ரைன் மீது குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்யா, உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கெர்சனில் உள்ள ரயில் நிலையம், பல்பொருள் அங்காடி மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தோடு, 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கீவ் மற்றும் ஒடேசா நகரங்களை தாக்க முயன்ற ரஷ்யாவின் 18 காமிகேஸ் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

capital,ukraine,russia,drones,people,evacuation ,தலைநகர், உக்ரைன், ரஷ்யா, ட்ரோன்கள், மக்கள், வெளியேற்றம்

ரஷ்யாவின் தாக்குதலையடுத்து உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியேறி வருகின்றனர். ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் குடியிருப்புகளும் சேதமடைந்தது. இதனையடுத்து குடியிருப்பாளர்கள் நகரில் இருந்து வெளியேற உள்ளூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

கெர்சன் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த 4 நாட்களில் 3-வது முறையாக உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து இன்று ரஷ்யா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், 24 காமிகேஸ் ட்ரோன்களில் 18 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|