Advertisement

உக்ரைனின் பல பகுதிகளில் ரஷிய படைகள் தாக்குதல்

By: Nagaraj Sun, 18 Sept 2022 10:18:17 AM

உக்ரைனின் பல பகுதிகளில் ரஷிய படைகள் தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்ய படைகள் தாக்குதல்... உக்ரைனின் பல பகுதிகளில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. உக்ரைனின் இராணுவம் இந்த வாரம் நாட்டின் வடகிழக்கில் இருந்த ரஷியப் படைகளை மின்னல் வேகத்தில் விரட்டியடித்தது.

இந்த பின்வாங்கும் நடவடிக்கை ரஷியாவிற்கு பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் பல பகுதிகளில் உக்ரேனிய படைகளின் நிலைகள் மீது ரஷிய படைகள் தாக்குதல்களை நடத்தியது. ரஷியப் படைகள் கெர்சன்,மைகோலேவ், கார்கிவ் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் தங்கள் தாக்குதல்களை நடத்தின

allegation,southern ukraine,attack,russia,multiple times ,குற்றச்சாட்டு,  தெற்கு உக்ரைன், தாக்குதல், ரஷ்யா, பலமுறை

ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளால் பதில் தாக்குதல்களை வெற்றிகரமாக தொடுக்க முடியவில்லை. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவில் கதிர்வீச்சு நிலைமை சாதாரண அளவில் இயல்பாக உள்ளது.


அதே வேளையில், ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகே உக்ரைன் படைகள் 2 வெவேறு சம்பவங்களில் நேற்று குண்டுவீசி தாக்குதலை நடத்தியதாகவும் ரஷியா குற்றம் சாட்டியது.ஆனால் உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதனை மறுத்துள்ளார்.

தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா ஆலை மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் ஒருவரையொருவர் பலமுறை குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|