Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியா உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளை மறுத்த ரஷிய சுகாதார மந்திரி

ரஷியா உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளை மறுத்த ரஷிய சுகாதார மந்திரி

By: Karunakaran Thu, 13 Aug 2020 10:03:34 AM

ரஷியா உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளை மறுத்த ரஷிய சுகாதார மந்திரி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கொரோனா வைரசை தடுத்து நிறுத்த முதல் தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

russian health minister,russia,corona vaccine,corona virus ,ரஷ்ய சுகாதார அமைச்சர், ரஷ்யா, கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ்

இந்நிலையில் ரஷியா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசி அவசர அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது, நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பற்றது என வெளிநாடுகள் விமர்சனம் செய்து வருகின்றன. தற்போது, ரஷிய தடுப்பூசிக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனங்கள் அடிப்படை அற்றவை என ரஷிய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.

மாஸ்கோவில் நேற்று ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ பேட்டி அளித்தபோது, ரஷிய தடுப்பூசிக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனங்கள் அடிப்படை அற்றவை. வெளிநாட்டு சகாக்கள், போட்டியாக பார்க்கிறார்கள் என்றே நம்புகிறேன். எனவே தான் அவர்கள் எதிரான கருத்துகளை கூற முயற்சிக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை ஆதாரம் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

Tags :
|