Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா – சீனா இடையே நேட்டோ படைகள் அதிக பிரச்சனைகளை உருவாக்குவதாக ரஷ்ய அமைச்சர் தகவல்

இந்தியா – சீனா இடையே நேட்டோ படைகள் அதிக பிரச்சனைகளை உருவாக்குவதாக ரஷ்ய அமைச்சர் தகவல்

By: Nagaraj Sat, 21 Jan 2023 10:28:01 PM

இந்தியா – சீனா இடையே நேட்டோ படைகள் அதிக பிரச்சனைகளை உருவாக்குவதாக ரஷ்ய அமைச்சர் தகவல்

ரஷ்யா: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேட்டோ படைகள் அதிக பிரச்சனைகளை உருவாக்கி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. 1949 ஆம் ஆண்டில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இந்த கூட்டு இராணுவ அமைப்பை உருவாக்கியது. எந்தவொரு உறுப்பு நாடு மீதும் ஆயுதம் ஏந்திய தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஐரோப்பாவில் பனிப்போருக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்கத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் இந்த அமைப்பு இருந்தது. 1955 இல், நேட்டோ கூட்டணிக்கு எதிர்வினையாக, ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் ஒரு தனி இராணுவ கூட்டணியை உருவாக்கியது.

வார்சா உடன்படிக்கையின் கூட்டாளிகள் பலர் 1991 இல் ஒப்பந்தத்தில் இருந்து விலகி, சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பிறகு நேட்டோவில் உறுப்பினர்களாக ஆனார்கள். நேட்டோவில் இப்போது 30 உறுப்பு நாடுகள் உள்ளன. நேட்டோ என்பது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் இராணுவக் கூட்டணியாகும். இது ஒரு மேற்கத்திய நாட்டின் எல்லைக்கு வெளியே அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முதல் அமைதி காக்கும் படையாக கருதப்படுகிறது.

china,india,nato,problem,russian minister, ,இந்தியா, சீனா, நேட்டோ, பிரச்சனை, ரஷ்ய அமைச்சர்

ஆனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் நேட்டோ படையினர் பல்வேறு வெளிநாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பது வாடிக்கையாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள நேட்டோ படைகளுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி ஒப்புதல் அளித்ததை அடுத்து ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது. போர் நடந்து 10 மாதங்களுக்கும் மேலாகிறது. இந்தப் போருக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி விளாடிமிர் புடினைப் பொறுத்த வரையில், உக்ரைன் நேட்டோ படையில் இணைவது ரஷ்யாவிற்கு ஆபத்தானது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேட்டோ படைகள் அதிக பிரச்சனைகளை உருவாக்கி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ‘‘ஏற்கனவே சீனாவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் பல சிக்கல்களை உருவாக்க இந்தியாவுக்கு அதிகாரம் அளிக்க அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டணியான நேட்டோ முயற்சித்து வருகிறது. ஜூன் 2022 இல், நேட்டோவின் மாட்ரிட் உச்சிமாநாடு இராணுவ தளத்திற்கான உலகளாவிய உறுதிப்பாட்டை அறிவித்தது.

Tags :
|
|
|