Advertisement

வடகொரியா ராணுவத்தை பாராட்டிய ரஷ்ய அமைச்சர்

By: Nagaraj Fri, 28 July 2023 09:38:18 AM

வடகொரியா ராணுவத்தை பாராட்டிய ரஷ்ய அமைச்சர்

வடகொரியா:ரஷ்ய அமைச்சர் செர்கேய் ஷாய்கு, வடகொரியாவை “உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவம்” என்று பாராட்டி உள்ளார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷாய்கு வட கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். வடகொரியா சென்றுள்ள அவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துள்ளார்.

minister meeting,north korean president,russian defense ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், வட கொரிய ஜனாதிபதி, பாராட்டு, ராணுவம், 70வது வெற்றி தினம், சக்தி வாய்ந்தது

அப்போது ரஷ்ய அதிபர் புதின் அனுப்பிய கடிதத்தை வழங்கினார். கிம் ஜாங் உன் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான ராணுவக் குழுவை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.

இருவருக்குமிடையிலான பேச்சுக்கள் மூலோபாய மற்றும் பாரம்பரியமான வடகொரியா-ரஷ்யா நட்புறவு பற்றி இருக்கும் என்றும் அவர் கூறினார். கொரியப் போரில் வட கொரியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் இந்த வாரம் 70-வது வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய வீரர்கள் மற்றும் சீன வீரர்கள் வடகொரியா சென்றுள்ளனர். இந்த சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி வடகொரிய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார். அப்போது, ரஷ்ய அமைச்சர் செர்கேய் ஷாய்கு, வடகொரியாவை “உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவம்” என்று பாராட்டினார்.

Tags :