Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி உடல்நிலை சீரானது

ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி உடல்நிலை சீரானது

By: Nagaraj Thu, 24 Sept 2020 4:31:57 PM

ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி உடல்நிலை சீரானது

உடல்நிலையில் முன்னேற்றம்... நச்சுத் தாக்குதல் காரணமாக ஜொ்மனி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து திரும்பினாா்.

இதுகுறித்து, பொ்லினில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சாரைட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

32 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு, அலெக்ஸி நவால்னியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. உள்நோயாளிகள் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டத்தை அவா் கடந்து விட்டாா்

doctors,report,toxic attack,alexei navalny ,மருத்துவர்கள், அறிக்கை, நச்சு தாக்குதல், அலெக்ஸி நவால்னி

அவரது உடல் நிலையில் காணப்படும் முன்னேற்றத்தையும், அவரது தற்போதைய நிலைமையையும் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கலாம் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவா்கள் முடிவுக்கு வந்தனா்.

இருந்தாலும், நவால்னிக்கு அளிக்கப்பட்ட நச்சு, அவரது உடலில் ஏற்படுத்தும் நீண்ட கால விளைவுகள் குறித்து உடனடியாகக் கூற முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|