Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை மகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததாக ரஷிய அதிபர் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியை மகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததாக ரஷிய அதிபர் அறிவிப்பு

By: Karunakaran Tue, 11 Aug 2020 5:54:48 PM

கொரோனா தடுப்பூசியை மகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததாக ரஷிய அதிபர் அறிவிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் இதுவரை 7.36 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

russian president,corona vaccine,daughter,vladimir putin ,ரஷ்ய ஜனாதிபதி, கொரோனா தடுப்பூசி, மகள், விளாடிமிர் புடின்

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ரஷ்யா, இங்கிலாந்து இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து பரிசோதனை நிலையில் உள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய அதிபர் புதின், இன்று காலை உலகின் முதன்முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எனது மகள் உடலில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிராக நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :