Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய தலைமைக்கும் அதன் மக்களுக்கும் ரஷிய அதிபர் வாழ்த்து தெரிவிப்பு

இந்திய தலைமைக்கும் அதன் மக்களுக்கும் ரஷிய அதிபர் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Mon, 15 Aug 2022 5:53:16 PM

இந்திய தலைமைக்கும் அதன் மக்களுக்கும் ரஷிய அதிபர்  வாழ்த்து தெரிவிப்பு

மாஸ்கோ: இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைமைக்கும் அதன் மக்களுக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஸ்த்வர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து உலகில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறிய வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள். சுதந்திரமான வளர்ச்சியின் பல ஆண்டுகளில், உங்கள் நாடு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பெரும் வெற்றியை பொருளாதார, சமூக, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் அடைந்துள்ளது.

greetings,president of russia ,ரஷிய அதிபர்,வாழ்த்து

மேலும் உலக அரங்கில் இந்தியா கணிசமான மதிப்பைப் பெறுகிறது. சர்வதேச நிகழ்ச்சி நிரலில் உள்ள அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியா மிக முக்கிய ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கிறது. மாஸ்கோவும் புதுடெல்லியும் பல பகுதிகளில் வெற்றிகரமாக ஒத்துழைக்கின்றன.

இதனை தொடர்ந்து நமது நட்பான மக்களுக்காக இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலக அளவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும் கூட்டு முயற்சிகளின் மூலம், வளர்ச்சியை உறுதி செய்வோம் என நான் உறுதியாக நம்புகிறேன்." என அவர் வாழ்த்தியுள்ளார்.

Tags :