Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்ய ஜனாதிபதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை; மறுப்பு தெரிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை; மறுப்பு தெரிவிப்பு

By: Nagaraj Tue, 21 July 2020 8:29:48 PM

ரஷ்ய ஜனாதிபதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை; மறுப்பு தெரிவிப்பு

மறுப்பு தெரிவிப்பு... ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு ஊசி போடப்பட்டதாக வெளியான தகவலை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்தவகையில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துவிட்டதாகவும் விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கடந்த ஏப்ரல் மாதமே கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

russian president,corona,vaccine,denial ,ரஷ்ய ஜனாதிபதி, கொரோனா, தடுப்பூசி, மறுப்பு தெரிவிப்பு

எனினும் இதனை ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “புதின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஒருபோதும் தடுப்பூசி ஏற்றப்படவில்லை.

கொரோனா தடுப்பூசி இன்னும் சான்றிதழ் பெறவில்லை. அது மருத்துவ பரிசோதனை மட்டத்திலேயே உள்ளது. தன்னார்வலர்கள் மட்டுமே தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஜனாதிபதியோ அல்லது அவரது நிர்வாகத்தில் உள்ளவர்களோ தன்னார்வலர்களாக இருந்ததாக நான் கேள்விப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

Tags :
|