Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் புதினின் பெயர் பரிந்துரை

அடுத்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் புதினின் பெயர் பரிந்துரை

By: Karunakaran Fri, 25 Sept 2020 3:00:13 PM

அடுத்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் புதினின் பெயர் பரிந்துரை

ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி போன்ற துறைகளுக்கு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் மிகவும் கவுரவமான பரிசாக கருதப்படும் இந்த விருதுக்கு மேற்படி துறைகளில் சிறந்து விளங்கும் பலரும் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த ஆண்டின் (2021) அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ரஷியாவின் பிரபல எழுத்தாளர் செர்ஜெய் கோம்கோவ் இந்த பரிந்துரையை செய்ததாக கடந்த 10-ந்தேதி அறிவித்து இருந்தார். இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று விளக்கம் அளித்தார்.

russia,vladimir putin,nobel peace prize,nominate ,ரஷ்யா, விளாடிமிர் புடின், அமைதிக்கான நோபல் பரிசு, பரிந்துரை

இதுகுறித்து டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இந்த விருதுக்கு முற்றிலும் வேறுபட்ட மக்கள் பரிந்துரைக்கப்படுவது உங்களுக்கு தெரியும். இவை அனைத்தும் அந்தந்த முயற்சிகளுடன் தொடர்புடையவர்கள் முன்வைக்கும் முயற்சிகள். இந்த விவகாரத்தில் அந்த எழுத்தாளர் பரிந்துரைத்துள்ளார். பரிந்துரைக்கப்பட்டவர்களை கருத்தில் கொள்வதில் ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அந்தவகையில் இந்த பரிந்துரையை விருதுக்காக தேர்வு செய்யப்பட்டால் அது சிறப்பாக இருக்கும். இல்லையென்றாலும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக இஸ்ரேல்-அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதி நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வேயை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் பரிந்துரை செய்தார். தற்போது நோபல் பரிசு தொகை 8.12 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|