Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா; ஆஸ்பத்திரியில் அனுமதி

ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா; ஆஸ்பத்திரியில் அனுமதி

By: Nagaraj Wed, 13 May 2020 09:02:34 AM

ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா; ஆஸ்பத்திரியில் அனுமதி

ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா... ரஷிய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ், கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷிய நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

russian chancellor,corona,spokesman,victim,admitted to hospital ,ரஷ்ய அதிபர், கொரோனா, செய்தி தொடர்பாளர், பாதிப்பு, ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ், கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ரஷிய பிரதமர் மிகைல் மிசுஸ்டினுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 2,116 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 43,512 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

russian chancellor,corona,spokesman,victim,admitted to hospital ,ரஷ்ய அதிபர், கொரோனா, செய்தி தொடர்பாளர், பாதிப்பு, ஆஸ்பத்திரியில் அனுமதி

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி ரஷியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|