Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிகிச்சை முடிந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார் ரஷ்ய பிரதமர் மிக்கைல்

சிகிச்சை முடிந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார் ரஷ்ய பிரதமர் மிக்கைல்

By: Nagaraj Wed, 20 May 2020 10:37:03 AM

சிகிச்சை முடிந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார் ரஷ்ய பிரதமர் மிக்கைல்

ரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30-ந்தேதி ரஷ்ய பிரதமர் மிக்கைல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் கொரோனா சிகிச்சை நிறைவடைந்து முற்றிலும் குணமடைந்து விட்டார்.

prime minister,corona therapist,office worker,healed ,
பிரதமர், கொரோனா சிகிச்சை, அலுவலகப்பணி, குணமடைந்தார்

தொடர்ந்து அவர் கேபினட் தலைமையகம் வந்து பணிகளை மேற்கொண்டார். அதிபர் புதின் உடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவில் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உள்பட பல அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :