Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா விளக்கம்

தாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா விளக்கம்

By: Nagaraj Wed, 15 July 2020 11:03:44 PM

தாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா விளக்கம்

பாதுகாப்பாக உருவாக்கப்பட்டுள்ளது... ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பான கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியதாக இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

18 பேர் ஆராய்ச்சியில் பங்கேற்றனர் மற்றும் அவர்கள் அனைவரும் கடுமையான பாதகமான நிகழ்வுகள், சுகாதார புகார்கள் அல்லது பக்க விளைவுகள் இல்லாமல் வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்துள்ளது. மேலும் சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

corona,vaccine,svetlana volchikina,russia ,கொரோனா, தடுப்பூசி, ஸ்வெட்லானா வோல்ச்சிகினா, ரஷ்யா

“அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது. ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. அவை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன” என்று ஆராய்ச்சியாளர் ஸ்வெட்லானா வோல்ச்சிகினா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. முன்னதாக மே மாத தொடக்கத்தில், பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவன விஞ்ஞானிகளுடன் இணைந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிவித்திருந்தார்.

Tags :
|