Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் கிடைக்க வாய்ப்பு

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் கிடைக்க வாய்ப்பு

By: Karunakaran Fri, 18 Sept 2020 4:44:49 PM

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் கிடைக்க வாய்ப்பு

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்து, உலகின் முதல் தடுப்பூசியை பதிவு செய்தது. இந்த தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-வி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளன. இது ரஷியாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி 3-ம் கட்ட சோதனையை முழுமையாக முடிக்காமலேயே பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அந்த தடுப்பூசி பாதுகாப்பானது, செயல் திறன் மிக்கது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை வாங்க பல்வேறு நாடுகள் ரஷியாவுடன் ஒப்பந்தங்களை செய்து வருகின்றன.

russia,sputnik-v vaccine,india,november ,ரஷ்யா, ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி, இந்தியா, நவம்பர்

இந்நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 10 கோடி டோஸ்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டுள்ள பிரபல மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசும் ரஷிய நேரடி முதலீட்டு நிதியமும் ஒப்பந்தம் செய்துள்ளன. ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்பந்தம் பெற்றதும் ரெட்டிஸ் லேபரட்டிசுக்கு ரஷியா 10 கோடி தடுப்பூசி டோஸ்களை வினியோகம் செய்யும்.

தற்போது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து நவம்பர் மாதத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதாக தெரிவித்தார்.


Tags :
|
|