Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்குலகம் உடனான ரஷ்யா போருக்கு ஆதரவு... வடகொரியா அதிபர் அறிவிப்பு

மேற்குலகம் உடனான ரஷ்யா போருக்கு ஆதரவு... வடகொரியா அதிபர் அறிவிப்பு

By: Nagaraj Thu, 14 Sept 2023 09:17:50 AM

மேற்குலகம் உடனான ரஷ்யா போருக்கு ஆதரவு... வடகொரியா அதிபர் அறிவிப்பு

ரஷ்யா: புனிதப் போருக்கு ஆதரவு... மேற்குலகம் உடனான ரஷ்யாவின் புனிதப் போரை ஆதரிப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவிலிருந்து ரயில் பயணமாக ரஷ்யா வந்தடைந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, பிரிமோர்ஸ்கி க்ராய் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

north korea,bilateral,russia,holy war,support ,வடகொரியா, இருதரப்பு, ரஷ்யா, புனிதப் போர், ஆதரவு

ரயில் நிலையத்திலிருந்து வோஸ்டோச்னி சென்ற கிம் ஜாங் உன்னை ரஷ்ய அதிபர் புதின் வரவேற்றார். பின்னர் வோஸ்டோச்னியில் உள்ள ராக்கெட் ஏவுதளங்களை அதிபர் புதினுடன் சென்று கிம் பார்வையிட்டார்.

ராணுவம் தொடர்பாக கிம்முடன் விவாதிப்பீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், இருவரும் அனைத்து விவகாரங்களையும் விவாதிப்போம் என புதின் தெரிவித்தார். பின்னர் ரஷ்யா மற்றும் வடகொரியா தலைவர்கள் இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags :
|