Advertisement

அமெரிக்காவிற்கு ரஷ்யா விடுத்த எச்சரிக்கை

By: Nagaraj Sun, 14 Aug 2022 5:16:12 PM

அமெரிக்காவிற்கு ரஷ்யா விடுத்த எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரேனியப் போரை ஒட்டி ரஷ்யாவைப் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறிவிப்பது குறித்து வாஷிங்டனில் பேச்சு இடம்பெற்று வருகின்றது. இதையடுத்து ரஷ்யா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இரண்டு செனட்டர்கள் கடந்த மாதம் அந்தப் பரிந்துரையை முன்வைத்தனர். லாட்வியா நாடாளுமன்றம் இவ்வாரத் தொடக்கத்தில் அந்த நடவடிக்கையை முன்னெடுத்தது.

moscow,warned,ties will break,washington,terrorism ,மாஸ்கோ, எச்சரித்தது, உறவு முறிந்து விடும், வாஷிங்டன், பயங்கரவாதம்

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது மேலும் விரிவான தடைகளைக் கொண்டு வர வேண்டும் என்று அது கூறியது.

இந்நிலையில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்ற பிரகடனத்தைச் செய்யும் முயற்சியில் வாஷிங்டன் ஈடுபட்டால் இருநாட்டுக்கும் இடையிலான அரசதந்திர உறவு முற்றாக முறிந்து போகக்கூடும் என்று மாஸ்கோ எச்சரித்தது.

Tags :
|
|