Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கென்யாவின் அதிபராக ரூட்டோ வெற்றி... வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம்

கென்யாவின் அதிபராக ரூட்டோ வெற்றி... வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம்

By: Nagaraj Thu, 18 Aug 2022 10:02:47 AM

கென்யாவின் அதிபராக ரூட்டோ வெற்றி... வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம்

நைரோபி: வன்முறையால் பதற்றம்... கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.


கென்யாவில் கடந்த வாரம் நடந்த அதிபர் பொதுத் தேர்தலில் 50.49% வாக்குகள் பெற்று வில்லியம் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல் தலைவருமான ரெய்லா ஒடிங்கா 48.85% வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில், தேர்தலில் முறைக்கேடு நடந்துள்ளதாக ரெய்லா ஒடிங்கா குற்றம் சாட்டினார். இந்தத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

president,election commission,official,notification,violence,police ,அதிபர், தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வம், அறிவிப்பு, வன்முறை, போலீசார்

இந்தச் சூழலில் வில்லியமின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் காரணமாக நைரோபியில் போலீசாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனினும், வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே, கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிபராக வில்லியம் ரூட்டோ பதவி ஏற்க உள்ளார்.

Tags :