ஐக்கிய தேசியக் கட்சி புதிய பிரதித் தலைவரானார் ருவான் விஜயவர்தன
By: Nagaraj Mon, 14 Sept 2020 8:43:14 PM
ருவான் விஜயவர்தன தெரிவு... ஐக்கிய தேசியக் கட்சி புதிய பிரதித் தலைவராக ருவான் விஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதித் தலைவர் பதவிக்கு ருவான் விஜயவர்தன, கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது, இதில் ருவான் விஜயவர்தன வெற்றிபெற்று பிரதித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ருவான் விஜயவர்தன 28 வாக்குகளைப் பெற்ற அதேவேளை ரவி கருணநாயக்க 10 வாக்குகளை மட்டுமே பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிராத்தித்து தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சஜித் பிரேமதாசவுக்கு பதிலாக ருவான் விஜயவர்தன பிரதி தலைவராக செயற்படவுள்ளார்.
ஆகஸ்ட் 05 பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த 54 உறுப்பினர்களை வெளியேற்ற ஜூலை மாதம் கட்சியின் செயற்குழு எடுத்த முடிவுத் தொடர்ந்து சஜித் பிரேமதாச பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவாசம் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை
ஒன்றிணைக்கவும் அதன் காரணமாக சஜித் பிரேமதாச பிரதி தலைவர் பதவியில் இருந்து
நீக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் ஆகஸ்ட் 5 ஆம்
திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றில் படுமோசமான இழப்பை சந்தித்தது
மட்டுமன்றி நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பெருகொள்ளகூட ஐக்கிய தேசியக்
கட்சி தவறியது.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் இரண்டாவது
இடத்தைப் பிடித்து நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியமை
குறிப்பிடத்தக்கது. இதேவேளை கட்சியின் தலைமை பதவியில் 2021 ஜனவரி மாதம் வரை
ரணில் விக்ரமசிங்க தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.