Advertisement

துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்

By: Nagaraj Tue, 14 July 2020 8:49:08 PM

துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்

ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை பாஜகவிடம் இருந்து கைப்பற்றி ஆட்சி புரிந்து வருகிறது காங்கிரஸ். ஆனால் தற்போது கோஷ்டி பூசலால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இந்த மோதல் வெடித்துள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க முன்னாள் ராகுல் காந்தி துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதனிடையே ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே சமாதானம் பேச கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

negotiation,decision,not taken,sachin pilot ,பேச்சுவார்த்தை, முடிவு, எடுக்கப்படவில்லை, சச்சின் பைலட்

எனினும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் தற்போது சச்சின் பைலட் துணை முதல்வர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் சச்சின் பைலட் பாஜகவில் சேர்வார் என்ற தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதற்கு பாஜக தான் காரணம் என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்து வருகிறது.

Tags :