Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாயில் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த சபாரி பூங்கா மீண்டும் திறப்பு

துபாயில் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த சபாரி பூங்கா மீண்டும் திறப்பு

By: Karunakaran Tue, 06 Oct 2020 3:58:20 PM

துபாயில் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த சபாரி பூங்கா மீண்டும் திறப்பு

துபாய் மாநகராட்சி சார்பில் 100 கோடி திர்ஹாம் செலவில் அல் வர்கா 5 என்ற பகுதியில் உள்ள அல் அவீர் செல்லும் சாலையில் பிரமாண்டமான வன விலங்குகள் உலாவும் பகுதி அமைக்கப்பட்டது. 119 ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட இந்த வன விலங்கு பகுதியானது சபாரி பூங்கா என பெயரிடப்பட்டது. இங்கு காட்டில் வாழும் விலங்குகள், பறவைகள் மற்றும் தண்ணீர் வாழ் உயிரினங்கள் என 3 ஆயிரம் வன விலங்குகள் இயற்கையான சூழலில் நடமாடி வருகிறது.

முதன் முதலில் இந்த பூங்கா பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. பின்னர் பூங்கா பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. தற்போது புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களை வரவேற்கும் விதமாக ஆப்பிரிக்க நாட்டின் பழங்குடியினரின் நடன நிகழ்ச்சிகள் நுழைவுவாயிலில் நடந்தது.

safari park,dubai,past 2 years,reopen ,துபாயின் சஃபாரி பார்க், கடந்த 2 ஆண்டுகளில், மீண்டும் திறப்பு

அரேபியா, ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் உள்ள கிராமங்களின் மாதிரிகள் மிக தத்ரூபமாக சிறந்த உள்கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை சுற்றி பார்க்க ரெயில் வண்டி உள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், வெள்ளை சிங்கம், புலி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, பாம்புகள், முதலை, ஆமை, ஓநாய்கள், நெருப்புக்கோழி, நீர்யானை, காண்டாமிருகம், சிம்பன்சி, குரங்குகள் உள்பட பல்வேறு விலங்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு 50 திர்ஹாமும், சிறியவர்களுக்கு 20 திர்ஹாமும் நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் சபாரி பயணம் செய்ய பெரியவர்களுக்கு 85 திர்ஹாமும், சிறியவர்களுக்கு 30 திர்ஹாமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் மற்றும் உதவியாளர்கள் உதவியுடன் சபாரி பயணம் செல்லலாம். இலவச அனுமதி பெற அடையாள அட்டை அல்லது ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். இந்த பூங்காவை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

Tags :
|