Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ..அகவிலைப்படி 5% வரைக்கும் கூட வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ..அகவிலைப்படி 5% வரைக்கும் கூட வாய்ப்பு

By: vaithegi Wed, 13 July 2022 6:17:06 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ..அகவிலைப்படி 5% வரைக்கும் கூட  வாய்ப்பு

இந்தியா: மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரு முறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜுலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். அதாவது, அந்த மாதத்திற்கான பணவீக்கம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை பொறுத்து தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் தான் 31% ஆக இருந்த அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 34% ஆக உள்ளது. அடுத்ததாக இந்த மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும் என ஊழியர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். அதாவது, ஏப்ரல் – மே மாதங்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் புள்ளி விவரங்களை பொறுத்து தான் இந்த மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

central govtcentral government employee,salary ,மத்திய அரசு ஊழியர்,சம்பள

மேலும், 5% வரைக்கும் கூட அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அப்படி 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் ஊழியர்களின் அகவிலைப்படி 39 சதவீதமாக உயரும்.

ஃபிட்மெண்ட் காரணி அடிப்படையிலும் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. தற்போது ஃபிட்மெண்ட் காரணி 2.57% த்தில் இருந்து 3.68% ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அப்படி, ஃபிட்மெண்ட் காரணி உயர்த்தப்பட்டால் குறைந்தபட்ச சம்பளமாக 18,000 ரூபாய் பெறும் மத்திய அரசு ஊழியர் 26,000 ரூபாய் வாங்க வாய்ப்பிருக்கிறது. இதனால், கிட்டத்தட்ட 8 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால்,

இதுவரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க போவதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

Tags :