Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு துறை சில பிரிவு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு அறிவிப்பு

அரசு துறை சில பிரிவு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு அறிவிப்பு

By: Nagaraj Thu, 19 Nov 2020 10:45:56 PM

அரசு துறை சில பிரிவு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு அறிவிப்பு

சம்பள குறைப்பு... தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சில பிரிவுகளின் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு குறித்து தமிழக அரசு இன்று ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் கால்நடைத்துறை மற்றும் சில துறைகளுக்கு மட்டும் சம்பளம் உயர்த்தப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று தமிழக அரசு, அரசு துறையில் துறைகளில் குறிப்பிட்ட பிரிவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து ஆணை ஒன்றை பிறப்பித்து உள்ளது.

கொரோனா காரணமாக பல தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் என பல மூடப்பட்டு வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது. பின்பு சில தளர்வுகளுடன் அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன.

government,salary reduction,government department,order ,அரசாணை, சம்பளம் குறைப்பு, அரசு துறை, உத்தரவு

திறந்து சிலகாலங்கள் ஆனாலும் தமிழக அரசால் சரியான ஊதியத்தை அரசு ஊழியருக்கு வழங்க முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவில் சம்பள குறைப்பு தொடர்பாக மனுக்கள் தனிநபர் மற்றும் பணியாளர் சங்ககளிடம் இருந்து பெறப்பட்டது. அந்த மனுவை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தமிழக அரசு இன்று வெளியிட்டது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க அரசு சார்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சம்பள குறைப்பு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள், மாற்றுத் திறனாளி நல அலுவலர்கள் உட்பட பலருக்கும் பொருந்தும்.

ஒவ்வொருவரின் மாத சம்பளத்தில் தலா ரூ.4500 முதல் 5000 வரை குறைக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் கால்நடை மற்றும் சில துறைகளுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் அரசாணை தனித்தனியாக ஒவ்வொரு துறைக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags :