Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூரத்தில் உள்ள நகைக்கடையில் வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனை

சூரத்தில் உள்ள நகைக்கடையில் வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனை

By: Karunakaran Sat, 11 July 2020 5:24:23 PM

சூரத்தில் உள்ள நகைக்கடையில் வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் அணிய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிலர் தங்களது தங்கத்தில் செய்த முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சூரத்தில் உள்ள நகைக்கடை வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த முகக்கவசங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனையை செய்யப்படுகிறது.

surat,diamond,jewelery shop,corona mask ,சூரத், வைர, நகைக் கடை, கொரோனா மாஸ்க்

இதுகுறித்து நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறுகையில், வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் வைத்து நடைபெறும் திருமணத்திற்காக எங்கள் கடைக்கு வந்து, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள் வேண்டும் என கோரினர். அதன்பின், எனக்கு இந்த யோசனை வந்தது என்று கூறினார்.

மராட்டிய மாநிலம், புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர், 2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தங்கத்தில் முக கவசம் செய்து அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|