Advertisement

பஞ்சாப்பில் ரேஷன் கடைகள் வாயிலாக வெங்காயம் விற்பனை

By: vaithegi Mon, 30 Oct 2023 5:03:30 PM

பஞ்சாப்பில் ரேஷன் கடைகள் வாயிலாக வெங்காயம் விற்பனை

பஞ்சாப் : பரவலாக பெய்து வரும் கனமழை காரணத்தினால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 5 கிலோ வெங்காயம் ரூ.100 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.75 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் ரூ.100 வரையிலும் கூட விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு இடையே, தொடர் மழையால் வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

onions,ration shops ,வெங்காயம் , ரேஷன் கடைகள்

இந்த நிலையில், பொதுமக்களின் தேவைக்காக பஞ்சாப் அரசு தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் வெங்காயம் கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. ஒருவர் ஆதார் அட்டை மூலமாக 4 கிலோ வரையிலும் வெங்காயம் வாங்கி செல்லலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ததை போல குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.இந்த நிலையில், பொதுமக்களின் தேவைக்காக பஞ்சாப் அரசு தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் வெங்காயம் கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. ஒருவர் ஆதார் அட்டை மூலமாக 4 கிலோ வரையிலும் வெங்காயம் வாங்கி செல்லலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ததை போல குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

Tags :
|