Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு முழுவதும் 300 நியாய விலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை

தமிழ்நாடு முழுவதும் 300 நியாய விலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை

By: vaithegi Wed, 12 July 2023 10:05:30 AM

தமிழ்நாடு முழுவதும் 300 நியாய விலை கடைகளில் இன்று  முதல் தக்காளி விற்பனை

சென்னை: தக்காளியின் விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக நாடு முழுவதும் தக்காளியின் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளது .

அந்த வகையில் சென்னையில் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அத்துடன் நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அறிவித்தது.

tomato,tamil nadu govt ,தக்காளி , தமிழ்நாடு அரசு

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 300 நியாய விலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் மட்டும் நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று 1 கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் நியாய விலை கடைகளில் 1 கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளது.


Tags :
|