Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தைவானுக்கு போர் விமானங்கள் விற்பனை; பென்டகன் அறிவிப்பு

தைவானுக்கு போர் விமானங்கள் விற்பனை; பென்டகன் அறிவிப்பு

By: Nagaraj Sun, 16 Aug 2020 10:43:59 AM

தைவானுக்கு போர் விமானங்கள் விற்பனை; பென்டகன் அறிவிப்பு

தைவானுக்கு போர் விமானங்கள்... சீனாவுடன் மோதல் அதிகரித்து வரும் சூழலில் தைவானுக்கு அமெரிக்கா 66 போர் விமானங்களை விற்க முன்வந்துள்ளது.

150 எப்.16 போர் விமானங்கள் தைவானுக்கு விற்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் 1992ம் ஆண்டு அறிவித்தார். இதில் 66 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தைவான் மேற்கொண்டது.

taiwan,warplanes,usa,pentagon,announcement ,தைவான், போர் விமானங்கள், அமெரிக்கா, பென்டகன், அறிவிப்பு

சுமார் 62 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஒப்பந்தத்தின்படி எப்.16 ஜெட் விமானங்களை தைவானுக்கு விற்பனை செய்ய உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

தைவானுக்குப் போர் விமானங்கள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள் விற்கக் கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் ஒப்பந்தத்தின் படி தைவானுக்கு ஜெட் விமானங்கள் விற்பனை செய்யப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா- சீனா மத்தியிலான மோதல் வலுத்து வருகிறது.

Tags :
|
|