Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இம்மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து

இம்மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து

By: vaithegi Wed, 01 Feb 2023 09:47:29 AM

இம்மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து

சென்னை: சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, “ரயில் பாதை பராமரிப்புக் காரணமாக, சேலம் - கோவை இடையிலான பயணிகள் (MEMU) ரயிலின் இயக்கம், ஏற்கெனவே இரு மாதங்களாக இயக்கப்படாத நிலையில், இன்று தொடங்கி பிப் 28-ம் தேதி வரை மேலும் 1 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சேலம் ஜங்ஷன்- கோவை சந்திப்பு இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் (MEMU) ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சேலம் - கோவை இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் என 2 மாதங்களும், சேலம் - கோவை பயணிகள் (MEMU ) ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

train service,salem,coimbatore,passengers , ரயில் சேவை ,சேலம் ,கோவை,பயணிகள்

இந்த நிலையில், திருப்பூர் - கோவை இடையிலான வழித்தடத்தில், இருகூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, சேலம் - கோவை பயணிகள் (MEMU) ரயில் (எண்.06803) மற்றும் கோவை - சேலம் பயணிகள் (MEMU) ரயில் (எண்.06802) போன்றவற்றின் இயக்கம், இன்று தொடங்கி, பிப் 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|