Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்றதால் .. பொதுமக்கள் அவதி

எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்றதால் .. பொதுமக்கள் அவதி

By: vaithegi Fri, 12 Aug 2022 1:55:55 PM

எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்றதால் .. பொதுமக்கள் அவதி

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 11.55 மணிக்கு சேலத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயில் இணைப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. மும்பை தாதர்-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரெயில் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தால் தான் சேலத்திற்கு சரியான நேரத்தில் புறப்பட முடியும்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே மும்பையில் எக்ஸ்பிரஸ் மழை காரணமாக தாமதமாக வருகிறது. இதனால் வழக்கமான நேரத்திற்கு சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தினமும் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு புறப்பட வேண்டிய சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. அதாவது 4 மணிநேரம் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்து இருந்தது.

salem express , சேலம் எக்ஸ்பிரஸ்,தாமதம்

இதை அடுத்து மும்பையில் இருந்து எழும்பூர் வரக்கூடிய ரெயில் அதிகாலை 3 மணியளவில் வந்து சேர்ந்தது. இதைத் தொடர்ந்து சேலத்திற்கு 4 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சேலம் செல்லக்கூடிய பயணிகள் விடிய விடிய எழும்பூர் நிலையத்தில் காத்து இருந்தனர்.

எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்றதால் தூக்கம் இழந்து பிளாட்பாரத்தில் காத்து இருந்தனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், சேலம், மேட்டூர் செல்லக்கூடிய பயணிகள் பெரும் சிரமப்பட்டனர்.

Tags :