Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது

By: Nagaraj Sun, 12 Mar 2023 9:51:08 PM

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது

புதுடில்லி: அங்கீகரிக்க முடியாது... இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் ஒரே பாலின ஈர்ப்பு பற்றி பல விவாதங்கள் நடந்தாலும், சில அரசாங்கங்கள் ஒரே பாலின ஈர்ப்பு மற்றும் திருமணங்களை பல நாடுகளில் மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அங்கீகரித்துள்ளன. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

central government,homosex,marriage, ,அங்கீகரிக்க முடியாது, ஓரினச்சேர்க்கை, திருமணங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய அரசு தன்பால் காதல் மற்றும் திருமண தடைச் சட்டங்களை ரத்து செய்தது.

இருப்பினும் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் இன்னும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், இந்தியாவில் பலர் ஒரே பாலின திருமணங்களைச் செய்கிறார்கள்.

இந்நிலையில், ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசு, ‘‘கணவன், மனைவி, குழந்தைகளை கொண்ட இந்திய குடும்ப அமைப்புடன், மாற்று பாலின திருமணங்களை ஒப்பிட முடியாது. ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிக்காததன் மூலம் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை.

Tags :